2025ம் ஆண்டில் அதிக தங்கம் வைத்துள்ள நாடுகளின் பட்டியல்: முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா?
2025ம் ஆண்டில் தங்க கையிருப்பில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் விவரங்கள் வெளிவந்துள்ளன.
தங்க கையிருப்பு வைத்துள்ள டாப் 7 நாடுகள்
அமெரிக்கா
தங்க கையிருப்பில் அமெரிக்கா உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.

தரவுகளின் படி, அமெரிக்காவிடம் சுமார் 8,133.46 டன்கள் தங்க கையிருப்பு உள்ளது.
ஜேர்மனி
உலக அளவில் தங்க கையிருப்பில் ஜேர்மனி இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஜேர்மனியிடம் சுமார் 3,350 டன்கள் தங்க கையிருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தாலி
மூன்றாம் இடத்தில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி உள்ளது.
இத்தாலியிடம் சுமார் 2,451.84 டன்கள் தங்கம் கையிருப்பு உள்ளது.

பிரான்ஸ்
பிரான்ஸ் தங்க கையிருப்பு வைத்துள்ள நாடுகளின் வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது.
பிரான்ஸ் இடம் சுமார் 2437 டன்கள் தங்க கையிருப்பு உள்ளது.

சீனா
உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளரான சீனா தங்க கையிருப்பில் 5வது இடத்தில் உள்ளது.
சீனாவிடம் 2,298.53 டன்கள் தங்கம் கையிருப்பு வைத்துள்ளது.

இந்தியா
இந்தியாவிடம் கிட்டத்தட்ட 880 டன்கள் தங்கம் கையிருப்பு வைத்துள்ளது. இதன் மூலம் இந்தியா இந்த பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

ஜப்பான்
சிறிய அளவு தீவு நாடான ஜப்பான் 846 டன்கள் தங்க கையிருப்புடன் இந்த வரிசையில் 7 வது இடத்தில் உள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |