இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க இந்த 8 விஷயங்களை மட்டும் கடைபிடிங்கள்
உடல் எடை அதிகரிப்பு என்பது ஆண் பெண் என இருபாலருக்கும் இடையில் உள்ள ஒரு பொதுவான பிரச்சனையாகும்.
உடல் எடை அதிகரிக்க சரியான உறக்கம் இல்லாதது, தேவையில்லாத நேரத்தில் அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்களும் உடல் எடை அதிகரிக்க செய்யும்.
அதன்படி, இந்த 8 திட்டங்களை தொடர்ந்து பின்பற்றினால், உடல் பருமனில் இருந்து தப்பிக்கலாம். அவை என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
1. சத்தான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். துரித உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
2. எப்பொழுதும் பசிக்காக உண்ண வேண்டும். ருசிக்காக அதிகமாக உண்பதால் உடல் அதை ஏற்க மறுத்து தேவையில்லாத கொழுப்புகள் உடலில் சேருகிறது. இதைத் தவிர்க்க தேவையான அளவு உணவை பசிக்கும் போதெல்லாம் சாப்பிடுவது நல்லது.
3. விரதம் இருப்பதால் உடலியல் மாற்றங்கள் சரிவர நிர்வகிக்க அமைப்புகளுக்கு சிறிது நேரம் ஓய்வு அளிக்கும். தன்னிலை மறந்து சரியாக இயங்காமல் இருந்த உறுப்புகள் புத்துணர்ச்சி பெறும்.
4. அதிக கொழுப்பில்லாத எண்ணெய்யை பயன்படுத்துவது நல்லது. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய்யைப் பயன்படுத்துவது நல்லது.
5. தினசரி உணவில் பச்சை காய்கறிகள், தாவர வகை உணவுகளை டயட்டில் சீரான முறையில் சேர்த்து உட்கொண்டு வந்தால், உடலில் தேவையில்லாமல் சேரும் கொழுப்பை குறைக்கலாம்.
6. எப்போதும் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும் உணவுகளை குறைவாக எடுத்துக் கொண்டு புரதம் அதிகமாக இருக்கும் உணவுகளை தேவையான அளவு சாப்பிட முன்னுரிமை கொடுங்கள்.
7. பழச்சாறுகளை காலையிலும், காய்கறிகள் வேகவைத்த சூப்களை மாலை வேளைகளிலும் பருக வேண்டும். இது உடலுக்கு தேவைப்படும் சத்துகளை வழங்கி, தேவையில்லாதவற்றை சிறுநீர் வழியாக வெளியேற்றி விடும்.
8. காலை உணவை தவிர்க்கக் கூடாது என்பதைத் தாண்டி, காலை உணவு சிறந்ததாக இருக்க வேண்டும். அதிகபடியான காரம், இனிப்பு, எண்ணெய், உப்பு இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது நாள் முழுதும் புத்துணர்ச்சியையும், உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புகளை அளிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |