ஒரு படத்திற்கு 175 கோடி வரை ஊதியம்பெறும் அமீர் கானின் சொத்து மதிப்பு
பாலிவுட் திரையுலகின் ''கான்'' நடிகர்களில் ஒருவரான அமீர் கானின் சொத்து மதிப்பு குறித்து இங்கு காண்போம்.
அமீர் கான்
1973ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அமீர் கான், 1988யில் வெளியான ''Qayamat Se Qayamat Tak'' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்த அமீர் கான், பாலிவுட் பாட்ஷா என்றழைப்படும் ஷாருக் கான், சல்மானுக்கு போட்டியாக உருவெடுத்தார்.
தற்போது அவர் ஒரு படத்திற்கு 175 கோடி ரூபாய் வரை ஊதியம் பெறும் அளவுக்கு உயர்ந்துள்ளார். Mr.Perfectionist என்று அழைப்பதும் அமீர் கான் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
வசதியான நபர்
பாலிவுட்டின் மிகவும் வசதியான நபர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள அமீர் கான், கிட்டத்தட்ட 2000 கோடிகள் சொத்துமதிப்பு கொண்ட நடிகர்களில் ஒருவராக உள்ளார்.
அமீர் கான் திரைத்துறை மட்டுமின்றி ரியல் எஸ்டேட், தொழில் முனைவோர் முயற்சிகள் உட்பட பல்வேறு வழிகளில் வருமானம் ஈட்டுகிறார்.
இதன்மூலம் அவரது நிகர மதிப்பு 1,862 கோடி ரூபாயாக உள்ளதாக கூறப்படுகிறது. பெவர்லி ஹில்ஸ் மென்க்ஷனில் சுமார் 75 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஆடம்பரமான குடியிருப்பில் அமீர் கான் வசிக்கிறார்.
மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600
அதேபோல் மும்பையில் 5,000 சதுர அடி பரப்பளவில் பரந்த கடல் எதிர்கொள்ளும் குடியிருப்பு ஒன்றும் அவருக்கு சொந்தமாக உள்ளது. இதன் மதிப்பு 60 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
கார்களை பொறுத்தவரை மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 உட்பட கார்களை வைத்துள்ளார். இதன் விலை 10.56 கோடியாகும்.