தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? பிரபல ஜோதிடர் கணிப்பு
தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, அரசியல் தலைவர்களும் கூட, மே மாதம் 4ஆம் திகதியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆம், தேர்தல் முடிவுகள் அன்றுதான் வெளியாக இருக்கின்றன!
இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்த தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளார் பிரபல ஜோதிடர் ஒருவர்.
தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?
பிரபல ஜோதிடரான ஷெல்வி கே தாமோதரன் என்பவர், தேர்தல் முடிவுகள் குறித்த தனது கணிப்புகளில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், தனது அரசியல் வாழ்வில் ஒரு முடிவெடுக்கும் கட்டத்தில் நுழைவதாகவும், அவரது அரசியல் பிரவேசம் தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்க்கு அவர் சில ஆலோசனைகளையும் தெரிவித்துள்ளார்.
அதாவது, மக்கள் விஜயைக்காண பெருமளவில் சாலையோரங்களில் கூடுவது ஆபத்தில் முடியலாம் என்றும், ஆகவே இப்படி சாலையில் மக்களை சந்திப்பதற்கு பதிலாக முன்கூட்டியே திட்டமிட்டு கட்டிடங்களுக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களை சந்திப்பது நல்லது என்றும் கூறியுள்ளார் ஷெல்வி.
தேர்தல் குறித்த ஷெல்வியின் கணிப்பு பலிக்குமா என்பதை அறிய மக்கள் இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |