இளைஞரின் அந்தரங்கப் படத்திற்காக 37 லட்சம் செலவிட்ட பிரித்தானிய ஊடக பிரபலம்: தாயார் புகார்

British Broadcasting Corporation London Sexual harassment
By Arbin Jul 09, 2023 12:28 AM GMT
Report

பிரித்தானிய ஊடக பிரபலம் ஒருவர் சுமார் 37 லட்சம் தொகையை செலவிட்டு, இளைஞர் ஒருவரின் அந்தரங்கப் புகைப்படங்களை பெற்றுக்கொண்ட விவகாரம் தற்போது தீயாக பரவி வருகிறது.

BBC செய்தி நிறுவன பிரபலம்

பிரித்தானியாவின் BBC செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் பிரபலம் ஒருவர் என தகவல் கசிய, பல பிரபலங்களும் மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர், அந்த ஊடக பிரபலம் யார் என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இளைஞரின் அந்தரங்கப் படத்திற்காக 37 லட்சம் செலவிட்ட பிரித்தானிய ஊடக பிரபலம்: தாயார் புகார் | Top Bbc Star Sex Pictures Scandal Mother Claimed @reuters

குறித்த ஊடக பிரபலம் அந்த இளைஞரின் அந்தரங்கப் புகைப்படங்களுக்காக 35,000 பவுண்டுகள் வரையில் செலவிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞரின் தாயார் தெரிவிக்கையில், அந்த பணத்தால் தமது பிள்ளை போதை மருந்து பழக்கத்திற்கு இரையானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பில் BBC செய்தி நிறுவனத் தலைவர்களுக்கு மே 19ம் திகதி முறைப்படி புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்த பிரபலம், அதன் பின்னரும் சக பிரபலங்களுடன் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டுள்ளதும், BBC செய்தி நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுடன் காணப்பட்டதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இளைஞரின் அந்தரங்கப் புகைப்படம் கோரிய விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், Gary Lineker, Rylan Clark மற்றும் Jeremy Vine உட்பட பல ஊடக பிரபலங்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

17 வயதிருக்கும் போது

இந்த நிலையில் தான் முன்னாள் பொலிஸ் அதிகாரியான Mark Williams Thomas, பொதுமக்களுக்கு அந்த நபரை அம்பலப்படுத்த வேண்டும் என கூறியதுடன், BBC செய்தி நிறுவனத்திற்கு நிதியுதவி அளிப்பவர்களேனும் அந்த பிரபலம் யார் என்பதை அறிய வேண்டும் என்றார்.

இளைஞரின் அந்தரங்கப் படத்திற்காக 37 லட்சம் செலவிட்ட பிரித்தானிய ஊடக பிரபலம்: தாயார் புகார் | Top Bbc Star Sex Pictures Scandal Mother Claimed @PA

ஒரு மாத காலமாக இந்த விவகாரத்தை BBC செய்தி நிறுவனம் விசாரித்து வருகிறது. இன்னும் தாமதப்படுத்தாமல், அந்த பிரபலத்தின் பெயரை வெளியிட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய தாயார் தமது புகார் மனுவில் குறிப்பிடுகையில், தமது பிள்ளைக்கு 17 வயதிருக்கும் போது தான் முதல் முறையாக, கடந்த 2020ல் குறுந்தகவல்கள் அந்த நபரிடம் இருந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

அந்த நபர் தாம் தமது பிள்ளையின் வாழ்க்கையை தொலைக்க வைத்தவர். போதை மருந்துக்கு அடிமையாக காரணம்.

ஒருமுறை 5,000 பவுண்டுகள் மொத்தமாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அந்த தொகை தமது பிள்லையின் அந்தரங்கப் புகைப்படத்திற்கான கட்டணம் என்பது தமக்கு தெரியவந்தது என்றார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US