சுற்றுலா செல்ல தலைசிறந்த இடங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ள சுவிஸ் மாகாணம்
உலகில், சுற்றுலா செல்ல தலைசிறந்த ஐந்து இடங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது சுவிட்சர்லாந்தின் Valais மாகாணம்.
சுற்றுலா செல்ல சிறந்த இடம்
பிரபல சுற்றுலா வழிகாட்டி பத்திரிகையான Lonely Planet, உலகில் சுற்றுலா செல்ல தலைசிறந்த ஐந்து இடங்களில் ஒன்றாக Valais மாகாணத்தை தேர்வு செய்துள்ளது.
Valais மாகாணத்தின் வசீகரம் தனித்தன்மை வாய்ந்தது என்றும், அதிலுள்ள உலகப் புகழ்வாய்ந்த Matterhorn சிகரம், மற்றும் Verbier மற்றும் Zermatt ரிசார்ட்டுகள் ஆண்டு முழுவதும் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கக்கூடியவை என்றும் கூறுகிறது Lonely Planet.
அத்துடன், சுவிட்சர்லாந்திலுள்ள 48 உயரமான மலைகளில் 41 மலைகள் இந்த மாகாணத்தில்தான் உள்ளன.
Lonely Planet பத்திரிகையின் இணையதளத்தை நாளொன்றிற்கு 5 மில்லியன் மக்கள் பார்வையிடுவதாக தெரிவிக்கும் சுற்றுலா நிபுணரான Florian Eggli என்னும் Lucerne பல்கலை விரிவுரையாளர், அந்த பத்திரிகை நம்பத்தகுந்தது என்கிறார்.
ஆகவே, அதை நம்பி, அந்த பத்திரிகையின் பணக்கார மற்றும் வயதான வாசகர்கள் Valais மாகாணத்திற்கு சுற்றுலா வருவதுடன், அதிக பணத்தை செலவிடவும் வாய்ப்புள்ளது என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |