பிரித்தானியாவில் லொட்டரியால் மில்லியனரானவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் தெரியுமா? வெளியான முழு விபரம்
யூரோ மில்லியன்ஸ் என்ற ஜாக்பாட் நிறுவனம் உலகிலே மிக பெரிய லொட்டரி நிறுவனம் ஆகும். அமெரிக்க லொட்டரி நிறுவனங்களை ஒப்பிடும்போது இந்த யூரோ மில்லியன் ஜாக்பாட்டை விளையாடவே பெரும்பாலானோர் விரும்புகிறார்கள்.
இந்நிலையில் இன்றிரவு 25 மில்லியன் யூரோக்களைக் வைத்து குலுக்கல் முறை நடைபெறயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் இந்த ஜாக்பாட்டில் வெற்றி பெற்றவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
ஸ்காட்லாந்தை சேர்ந்த Colin -Chris Weir தம்பதி கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற யூரோ மில்லியனில் பங்குபெற்று 161மில்லியன் யூரோக்களை வெற்றி பெற்று முதல் இடத்தில் இருக்கின்றனர். இவர்கள் ஆரம்பத்தில் லார்க்ஸ் அருகே நாக் வீட்டை வாங்கினார்கள். பின்னர் ஸ்காட்லாந்தில் சமூக தொண்டு ஒன்றை நிறுவி ஏழை மக்களுக்கு உதவி செய்தார்கள்.
ஏப்ரல் 2019ஆம் ஆண்டில் இருவரும் தங்களது 38 வருட திருமண வாழக்கையை முடித்து கொள்ள திட்டமிட்து கொண்டிருந்த பொழுது மூன்று மாதங்களில் கொலின் சிறுநீரக செயலிழப்பு பிரச்சனையால் மரணம் அடைந்துவிட்டார். தற்போது இருவரும் வாங்கிய வீட்டிற்கு ஒரே உரிமையாளராக கிரிஸ் திகழ்கிறார்.
அட்ரியன் மற்றும் கில்லியன் 2012 ஆம் ஆண்டு யூரோ மில்லியனில் 148 மில்லியன் யூரோக்களை வென்று 2வது இடத்தில் உள்ளனர். The sun உடன் இணைந்து அட்ரியன் உலகின் மிகப்பெரிய லேடி காகா நினைவுச் சின்னங்களைக் கொண்ட ஒரு கடையைத் திறந்தார். பாப் சிலையின் காலணிகள், உடைகளுக்கு சுமார் 10,000 யூரோக்களை செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் சேர்ந்து ஒரு மாளிகையை வாங்கினார்கள். ஆனால் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.
பிரான்சிஸ் மற்றும் பேட்ரிக் கொன்னோலி ஆகியோர் 2019இல் 114.9 மில்லியன் யூரோவை மில்லியன்ஸ் ஜாக்பாட்டில் வென்றனர். இவர்கள் கடந்த ஆண்டு ஊரடங்கில் வீட்டிலேயே முடங்கிய குழந்தைகளுக்காக கணினிகளை வாங்கி கொடுத்துள்ளனர்.
கேம்பிரிட்ஜ் ஜோடி டேவ் மற்றும் ஏஞ்சலா டேவ்ஸ் 2011இல் 101 மில்லியன் டாலர்களை வென்றனர். இந்த ஜோடி தங்கள் குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் 30 மில்லியன் யூரோக்களை வழங்கியதாகவும் அதே நேரத்தில் ஒரு தொண்டு நிறுவனத்தை அமைத்ததாகவும் கூறப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில் அவர்களது ஆடம்பர வீட்டில் ஒரு கும்பல் அவர்களைக் கட்டிப்போட்டு அவர்களிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
கரேத் மற்றும் கேத்தரின் 2012 இல் 40.6 மில்லியன் யூரோக்களை வென்றபோது தங்களை மில்லியனர்கள் என்று முத்திரை குத்திக் கொண்டனர். கட்டிட வேலைக்கு சென்று கொண்டிருந்தவர்கள் லாட்டரி அடித்து ஒரே நாளில் பணக்காரர்களாக மாறிவிட்டனர். இது தான் அதிர்ஷ்டமா என்று அனைவரையும் ஆச்சிரியத்தில் மூழ்க வைத்த ஜோடி.
இவர்கள் Old Trafford என்ற பெரிய மாளிகையை வாங்கினார்கள். கரேத் வேறொரு பெண்ணுடன் உறவு வைத்திருந்தது அவரது மனைவிக்கு தெரிய வர இருவரும் பிரிந்துவிட்டனர்.