வீட்டை பூட்டி பாதுகாப்பாக இருங்கள்! கனடா அரசியல்வாதிகளுக்கு உயர்மட்ட நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை
கனடா அரசியல்வாதிகள் அவர்களின் வீட்டு கதவுகளைப் பூட்டி பாதுகாப்பாக இருக்குமாறு உயர்மட்ட நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டிற்குள் நுழையும் டிரக் ஓட்டுகள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற கனேடிய அரசாங்கத்தின் கொரோனா தடுப்பூசி ஆணையை எதிர்த்து டிரக் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கனடாவில் டிரக் ஓட்டுநர்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக தனிநபர் வீடுகள் குறிவைக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து, கனடா அரசியல்வாதிகள் அவர்களின் வீட்டு கதவுகளைப் பூட்டி பாதுகாப்பாக இருக்குமாறு உயர்மட்ட நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரி எச்சரித்துள்ளார்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக டிரக்குகளுடன் ஓட்டுநர்கள் பேரணியாக செல்ல உள்ளனர். முதல் கட்டமாக சில டிரக்குகள் தலைநகர் ஒட்டாவா வந்துள்ளன, இந்த பேரணியில் பல ஆயிரம் பேர் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டாவா பொலிசார் தேசிய பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து பொது பாதுகாப்புக்கு சாத்தியமான அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு வருகின்றனர்.
போராட்டக் குழுவின் சில தலைவர்கள் அமைதியான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர், ஆனால் சிலர் வன்முறை அச்சுறுத்தல்கள் விடுத்துள்ளனர்.
நண்பகல் நிலவரப்படி, பாராளுமன்ற ஹில் வாயில்களுக்கு வெளியே நடைபாதையில் 100க்கும் மேற்பட்டோர் வரிசையாக நின்றுக்கொண்டிருக்கின்றனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.