வெளிநாட்டில் முகத்தில் சுடப்பட்ட பிரபல அரசியல்வாதி... படுகொலை வழக்கில் கைதான பிரித்தானியப் பெண்
மாட்ரிட்டில் ஸ்பெயின் அரசியல்வாதி ஒருவரை படுகொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பொலிஸார் பிரித்தானியப் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.
பிரித்தானியப் பெண் உட்பட
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மக்கள் கட்சியின் முன்னாள் தலைவர் Alejo Vidal-Quadras என்பவர் நவம்பர் 9ம் திகதி இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபரால் முகத்தில் சுடப்பட்டார்.
@ap
இந்த வழக்கை விசாரித்து வந்த பொலிசார், தற்போது பிரித்தானிய பெண் உட்பட மூவரை கைது செய்துள்ளனர். இதில் இருவர் ஸ்பெயின் நாட்டவர் என்றே கூறப்படுகிறது. இந்த வழக்கில் பிரித்தானியப் பெண்ணின் தொடர்பு குறித்து தீவிரமாக விசாரிக்கப்படும் என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், அரசியல்வாதி Alejo மீது தாக்குதல் நடத்தியவர் வாடகை கொலையாளி எனவும், அவர் வட ஆப்பிரிக்க நாட்டவர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
@reuters
விரிவான விசாரணை
மட்டுமின்றி, கைதாகியுள்ள பிரித்தானிய பெண்ணின் காதலன் குறிப்பிட்ட சிலரின் கோரிக்கையை ஏற்று இந்த கொலை முயற்சியை முன்னெடுத்திருக்கலாம் எனவும், இதில் பிரித்தானிய பெண்ணின் பங்கு என்ன என்பது தொடர்பில் விரிவான விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என்றும் பொலிசார் கூறுகின்றனர்.
Lanjaron பகுதியிலேயே குறித்த பிரித்தானியப் பெண்ணும் அவரது காதலரும் வசித்து வந்துள்ளனர். அவர்கள் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் தொடர்பில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை முன்னெடுத்த பொலிசார்,
@twitter
Alejo மீதான தாக்குதல் சம்பவத்தில் அந்த கார் தேடப்பட்டு வந்ததை உறுதி செய்தனர். இதனையடுத்தே பிரித்தானியப் பெண்னும் அவரது காதலன் உட்பட மூவர் கைதாகியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |