மேலாடையில்லாமல் புடின் வெளியிட்ட புகைப்படங்கள்... வெளிப்படையாக கேலி செய்த கனடா பிரதமர்
ஜேர்மனியில் நடைபெறும் G7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள கனடா பிரதமரும், பிரித்தானிய பிரதமரும், சட்டையில்லாமல் புடின் வெளியிட்டுள்ள புகைப்படங்களை வெளிப்படையாக கேலி செய்துள்ளார்கள்.
தனது ஜாக்கெட்டைக் கழற்றியபடி பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ‘நாம் புடினைவிட வலிமையானவர்கள் என்பதைக் காட்டவேண்டும்’ என்று கூற,
ஆமாம், நாமும் சட்டை போடாமல் நெஞ்சைக் காட்டியபடி குதிரை சவாரி செய்து, நமது சிக்ஸ் பேக்கைக் காட்டவேண்டியதுதான் என்று கூறியிருக்கிறார் ட்ரூடோ!
சட்டையில்லாமல் குதிரை ஏற்றம், மீன் பிடிப்பது, கரடி வேட்டையாடுவது என வரிசையாக புடினுடைய புகைப்படங்கள் பல ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, அவை மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கேலி கிண்டல்களுக்கு ஆளாகிவருவது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.