ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் பெற்ற தடகள வீராங்கனை மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி
அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான டோரி போவி, அவரது வீட்டில் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒலிம்பிக்கில் சாம்பியன்
அமெரிக்காவை சேர்ந்த டோரி போவி 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் ஆவார்.
@afp
இவர் கடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற்று, ரிலே அணியுடன் தங்கம் உட்பட மூன்று பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த மே 3ஆம் திகதி அமெரிக்காவிலுள்ள அவரது வீட்டில், டோரி போவி சடலமாக மீட்கப்பட்ட செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் சோகம்
இதனை தொடர்ந்து 32 வயதான டோரி போவி எப்படி உயிரிழந்தார், என்பதனை பற்றி சரியான தகவல்கள் எதுவும் கிடைக்கப்படவில்லை.
“We’re devasted to share the very sad news that Tori Bowie has passed away. We’ve lost a client, dear friend, daughter and sister. Tori was a champion…a beacon of light that shined so bright! We’re truly heartbroken and our prayers are with the family and friends. pic.twitter.com/ES83SjM7u4
— Icon Management Inc. (@iconmanagement) May 3, 2023
“டோரி போவி காலமானார் என்ற சோகமான செய்தியை பகிர்ந்து கொள்வதில், நாங்கள் பேரழிவுக்கு ஆளாகிறோம்” என ட்விட்டரில் ஐகான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டோரி போவி ரியோ 100 மீட்டர் பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். அப்போட்டியில் ஜமைக்காவின் எலைன் தாம்சன் முதலிடம் பிடித்துள்ளார்.
உலக தடகள போட்டிகளில் டோரி போவியின் தாக்கம் அளவிட முடியாது, அவரது இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கல்கள் என உலக தடகள நிர்வாகம் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.