இடைத்தேர்தலில் மரண அடி வாங்கிய ரிஷி சுனக் அரசாங்கம்... வரலாற்று வெற்றிகளைக் கைப்பற்றிய எதிர்க்கட்சிகள்
முக்கியமான இடைத்தேர்தலில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் கட்சி கடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறைவான வாக்கு வித்தியாசத்தில்
மூன்று தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியை தக்க வைத்துள்ளது.
@pa
எஞ்சிய இரு தொகுதிகளில் லிபரல் டெமோகிராட்ஸ் மற்றும் லேபர் கட்சி ஆகியோர் வெற்றியை பதிவு செய்துள்ளனர். இந்த இரு தொகுதிகளும் ஏற்கனவே கன்சர்வேட்டிவ் கட்சி வசம் இருந்தவை என்றே தெரியவந்துள்ளது.
Selby and Ainsty தொகுதியில் லேபர் கட்சியின் Keir Mather 16,456 வாக்குகள் பெற்று, கடந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வசமிருந்த தொகுதியை கைப்பற்றியுள்ளார்.
வெறும் 495 வாக்குகள்
இதேப்போன்று கன்சர்வேட்டிவ் கட்சி வசமிருந்த Somerton and Frome தொகுதியை லிபரல் டெமோகிராட்ஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரை விட 11,008 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியுள்ளார்.
@pa
ஆனால் Uxbridge and South Ruislip தொகுதியில் மட்டும் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 495 வாக்குகள் வித்தியாசத்தில் தங்கள் தொகுதியை தக்கவைத்துள்ளது.
இதனிடையே, Somerton and Frome தொகுதியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் Sarah Dyke தெரிவிக்கையில், ரிஷி சுனக் அரசாங்கம் வெறும் கூச்சல் குழப்பத்தை ஏற்படும் கோமாளிகளின் கூடாரமாகவே உள்ளது என கடுமையாக விமர்சித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |