கனடாவில் 20 வயது இளைஞர் சுட்டுக் கொலை! மருத்துவமனையில் பிரிந்த உயிர்
கனடாவில் அடுக்குமாடி வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அடுக்குமாடி வீட்டில்
ரொறன்ரோவின் லாரன்ஸ் அவென்யூ மற்றும் ஓர்டன் பார்க் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தான் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அன்றைய தினம் அதிகாலை 4.45 மணிக்கு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு 20 வயது இளைஞர் ஒருவர் படுகாயங்களுடன் கிடந்தார். இதையடுத்து அவரை மீட்ட பொலிசார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
ctvnews
விசாரணை
அங்கு இளைஞருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் திங்களன்று உயிரிழந்தார்.
கொலை வழக்காக பதிவு செய்து பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளி தொடர்பிலான தகவல்கள் ஏதும் தற்போது இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.