கனடாவை சேர்ந்த 29 வயது இளம்பெண் பாதுகாப்பு குறித்து பொலிசார் கவலை! தேடும் பணி தீவிரம்
கனடாவில் ஒரு வாரத்திற்கு மேலாக காணாமல் போன இளம்பெண்ணின் பாதுகாப்பு குறித்து பொலிசார் கவலை கொண்டுள்ளனர்.
ரொறன்ரோவை சேர்ந்த அலிசா முர்பி என்ற 29 வயது இளம்பெண் கடந்த 8ஆம் திகதி Danforth and Greenwood அவென்யூ அருகே காணப்பட்டுள்ளார். இதன்பின்னர் அலிசா காணாமல் போனார்.
அலிசா காணாமல் போய் ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில் அவர் பாதுகாப்பு குறித்து பொலிசாருக்கு கவலை ஏற்பட்டுள்ளது. 5 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட அலிசா 160 பவுண்ட்கள் எடை கொண்டவர் ஆவார்.
அவரது வலது மணிக்கட்டு, இடது மோதிர விரல், கழுத்தின் வலது பக்கம் மற்றும் அவளது காதுக்கு பின்புறம் பச்சை குத்தப்பட்டிருக்கும். அலிசா கடைசியாக சாம்பல் நிற டிராக்சூட் அணிந்திருந்தார் என பொலிசார் தெரிவித்தனர்.
அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் கூறலாம் என பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.