இதயத் துடிப்பு நின்ற இதயத்தை நோயாளிக்கு பொருத்திய மருத்துவர்கள்: மருத்துவ உலகில் ஒரு மைல்கல்
கனடாவில், இதயத் துடிப்பு நின்ற இதயம் ஒன்றை நோயாளி ஒருவர் உடலில் பொருத்தி அவருக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளனர் மருத்துவர்கள்.
இன்றைய காலகட்டத்தில், இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக ஏராளம் நோயாளிகள் காத்திருக்கும் நிலையில், இந்த அறுவை சிகிச்சை மருத்துவ உலகில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது!
இதயத் துடிப்பு நின்ற இதயத்தை...
பொதுவாக, மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயத்தை, அவரது இதயம் துடித்துக்கொண்டிருக்கும்போதே அகற்றி, இதயம் தேவைப்படும் மற்றொருவருக்கு பொருத்துவதுதான் வழக்கம்.
Sue Reid/CBC
ஆனால், circulatory criteria (DCC) heart transplant என்னும் முறையில், மரணமடைந்த ஒருவருடைய உடலிலிருந்து இதயத்தை அகற்றி இதயம் தேவைப்படும் ஒருவர் உடலில் பொருத்துகிறார்கள்.
அவ்வகையில், கனடாவில், இதயத் துடிப்பு நின்ற இதயம் ஒன்றை நோயாளி ஒருவர் உடலில் பொருத்தி அவருக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளனர் மருத்துவர்கள்.
கனடாவின் ரொரன்றோ பொது மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் இந்த சாதனையைப் படைத்துள்ளார்கள்.
CNW Group/University Health Network
இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட, அதாவது, இதய தானம் பெற்ற அந்த நோயாளியில் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக, அந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவக் குழுவில் ஒருவரான Dr. Seyed Alireza Rabi தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் மட்டுமே 103,000 பேர் இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக, இதய தானம் பெற காத்திருக்கிறார்கள்.
ஆக, இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக ஏராளம் நோயாளிகள் காத்திருக்கும் நிலையில், இந்த அறுவை சிகிச்சை மருத்துவ உலகில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |