பணம் கொடுத்துவிட்டு, இதை யாரிடமும் கூறக்கூடாது என்றார்! கனடாவில் வீட்டில் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
கனடாவில் அடுக்குமாடி வீட்டுக்குள் புகுந்து இளம்பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரொறன்ரோவில் தான் இந்த சம்பவம் கடந்த மாதம் 25ஆம் திகதி நடந்துள்ளது. அங்குள்ள அடுக்குமாடி வீட்டில் பெண்ணொருவர் தனியாக இருந்தார்.
அப்போது அவரை பார்க்க வந்த பவுல் நோல் (57) என்பவர் அப்பெண்ணுடன் தனிமையில் இருக்க வலியுறுத்தினார்.
ஆனால் அதற்கு அப்பெண் மறுத்த நிலையில் வீட்டு கதவை மூடிவிட்டு அவரை பவுல் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்.
பின்னர் அப்பெண்ணுக்கு பணம் கொடுத்துவிட்டு, இதை யாரிடம் கூறக்கூடாது என பவுல் சொல்லியிருக்கிறார்.
ஆனால் நடந்த அனைத்தையும் பொலிசில் அப்பெண் கூறிய நிலையில் பொலிசார் பவுலை நேற்று கைது செய்தனர்.
அவர் மீது சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்திலும் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.