100வது பிறந்தநாளினை கொண்டாடவிருக்கும் 18 பிள்ளைகளின் தாயாரான கனேடியர்
இன்னும் சில தினங்களில் தனது 100வது பிறந்தநாளினை கொண்டாடவிருக்கிறார் ரொறன்ரோவை சேர்ந்த பெண்மணி.
கரீபியன் நாடான ஜமைக்கா
எதிர்வரும் பிப்ரவரி 3ம் திகதி 18 பிள்ளைகளின் தாயாரான Vincella Richards என்பவர் தமது 100வது பிறந்தநாளினை கொண்டாட இருக்கிறார்.
தம்மால் இயன்ற அனைத்தையும் தாம் செய்து வருவதாகவும், எவர் உதவியும் இன்றி தம்மால் நடக்க முடியும் என்றும், 99 வயதிலும் தம்மால் வாசிக்க முடியும் என்றும் Vincella Richards குறிப்பிட்டுள்ளார்.
Credit: cp24
தமது கணவர் மரணமடைந்த பின்னர் 1980ல் கரீபியன் நாடான ஜமைக்காவில் இருந்து கனடாவின் ரொறன்ரோவுக்கு தமது பிள்ளைகளுடன் புலம்பெயர்ந்துள்ளார் Vincella Richards.
அப்போது அவரது பிள்ளைகளில் 8 பேர்கள் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என்றே கூறப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான பிள்ளைகளுடன் ஒரு பெரும் குடும்பம் என்ற கனவு தமக்கு எப்போதும் இருந்ததில்லை என்று குறிப்பிட்டுள்ள வின்செல்லா ரிச்சர்ட்ஸ், அனால் அவ்வாறு அமைந்துவிட்டது, தம்மால் என்ன செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
தமது பிள்ளைகளுக்கு உரிய கவனிப்பும் நல்ல கல்வியும் தம்மால் அளிக்க முடிந்தது என கூறும் அவர், அதனாலையே, தம்மை அவர்கள் தற்போது கவனித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
100 வயது கடந்த 13,500 பேர்கள்
அவரது மகள்களில் ஒருவர் தெரிவிக்கையில், அதிக பணவசதி இல்லை என்ற போதும், ஒரு நாள் கூட பசியுடன் தூங்க சென்றதில்லை என தாயாரின் கவனிப்பு குறித்து நெகிழ்ந்துள்ளார்.
Credit: cp24
40 பேரப்பிள்ளைகளில் ஒருவரான Javan Downswell தெரிவிக்கையில், குடும்பத்திற்காக அவர் நாள் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்துள்ளார் என்றார். 18 பிள்ளைகளுக்கும் முறையான உணவளிக்கவும் அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பதும் எளிதானதல்ல என குறிப்பிட்டுள்ளார் ரிச்சர்ட்ஸ்.
சமீப காலம் வரையில் சில கிலோ மீற்றர்கள் நடந்தே செல்லும் பழக்கம் கொண்டிருந்தார் ரிச்சர்ட்ஸ். மட்டுமின்றி, உணவு கட்டுப்பாடும் கொண்டிருந்தார். பதப்படுத்திய உணவுகளை அவர் எடுத்துக்கொள்வதில்லை.
உடல் பயிற்சியுடன் மனதுக்கான பயிற்சியாக நாள் தோறும் வாசிக்கவும் பழக்கமாக கொண்டுள்ளார் ரிச்சர்ட்ஸ். கனடாவில் தற்போது 100 வயது கடந்த 13,500 பேர்கள் உயிருடன் இருப்பதாக ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. 2018 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 43 சதவிகிதம் அதிகம் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |