கனடாவில் இந்த தடுப்பூசி விநியோகம் உடனடி நிறுத்தம்! என்ன காரணம்?
அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக கனடாவின் ஒன்ராறியோ மாநில அரசு அறிவித்துள்ளது.
சமீபத்தில் அரிய இரத்தக் கட்டிகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், ஒன்ராறியோ மாகாணம் அஸ்ட்ராஜெனேகா கோவிட் -19 தடுப்பூசியை முதல் ஷாட்டாக விநியோகிக்கப்படுவதை உடனடியாக "மிகுந்த எச்சரிக்கையுடன்" இடைநிறுத்துகிறது என்று கனடாவின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டேவிட் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
ஒன்ராறியோ மாகாணத்தில் மார்ச் மாத தொடக்கத்திலிருந்து 650,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசியின் 202,000-க்கும் மேற்பட்ட ஷாட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஒன்ராறியோவில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 66,000 பேரில் ஒருவருக்கும், கனடா முழுவதிலும் 55,000பேரில் ஒருவருக்கும் Vaccine-induced thrombotic thrombocytopenia அல்லது VITT எனும் அரிய இரத்தக் கட்டிகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
இதனால், ஆஸ்ட்ரஜனிகா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதை உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கை பின்பற்றப்படுகிறது என டேவிட் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்பு இருந்ததை வீட இப்போது பாதிக்கப்படுவதற்கான மற்றும் இறப்புக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே, முதல் டோஸைப் பெற்ற ஒன்டேரியர்கள், இரண்டாவது ஷாட்டுக்கு வேறு தடுப்பூசிக்கு மாற வேண்டுமா அல்லது அஸ்ட்ராஜெனேகாவையே செலுத்தவேண்டுமா, இதனை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்கிறதா என்பது குறித்து இன்னும் சொல்லப்படவில்லை.
அஸ்ட்ராஜெனேகாவை போட்டுக்கொண்டவர்களில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஒன்ராறியோ பிரீமியர் டக் ஃபோர்டு, ஒன்ராறியோ சுகாதார மந்திரி கிறிஸ்டின் எலியட் மற்றும் டொராண்டோ மேயர் ஜான் டோரி ஆகி உயர்மட்ட அரசியல் தலைவர்களில் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.