கொளுத்தும் வெயிலில் பல மணி நேரம் கேட்பாரற்று கிடந்த சடலம்: கனடாவில் அதிர்ச்சி சம்பவம்
கனடாவின் ரொறன்ரோவில் சாலை விபத்தில் சிக்கிய 90 வயது நபரின் சடலம் கொளுத்தும் வெயிலில் பல மணி நேரம் கேட்பாரற்று காணப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
90 வயது நபர்
குறித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சடலத்தை அகற்றும் நடவடிக்கை மீது கேள்வியும் எழுந்துள்ளது. இந்த வார துவக்கத்தில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் லொரி மோதிய இருவரில் இந்த 90 வயது நபரும் ஒருவர். ரொறன்ரோவில் பதிவான மிக அதிக வெப்பமான நாட்களில் ஒன்று என அன்றைய நாள் பதிவாகியிருந்தது என்றே கூறுகின்றனர்.
செவ்வாய்க்கிழமை சுமார் 12:28 மணியளவில் தகவல் அறிந்ததை அடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 90 வயது முதியவர் மற்றும் 79 வயது பெண் ஒருவரும் வாகன நிறுத்துமிடத்தை கடக்கும்போது, பின்னால் வந்த வெள்ளை நிற ஹினோ டிரக் அவர்கள் மீது மோதியுள்ளது.
கொளுத்தும் வெயிலில்
இதில் குறித்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் கொண்டுசெல்லப்பட, அந்த முதியவர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார். இந்த நிலையிலேயே, விபத்து ஏற்பட்டு பல மணி நேரம் கடந்தும் அந்த முதியவரின் சடலத்தை அப்பகுதியில் இருந்து உரிய அதிகாரிகள் நீக்கவில்லை எனவும், கொளுத்தும் வெயிலில் நடைபாதையில் கேட்பாரற்று காணப்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் நடந்து 6 மணி நேரத்திற்கு மேலானதாகவும், அப்போதும் அந்த சடலம் அப்புறப்படுத்தப்படவில்லை எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |