கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம்: பயணிகளுக்கு பெரும் தொகை இழப்பீடு! டெல்டா ஏர்லைன்ஸ் அறிவிப்பு
கனடாவின் ரொறன்ரோவில் தலைகீழாக கவிழ்ந்த விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு விமான நிறுவனம் இழப்பீடு அறிவித்துள்ளது.
தலைகீழாக கவிழ்ந்த விமானம்
ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில்(Toronto Pearson Airport) திங்கட்கிழமை பிற்பகலில் என்டேவர் ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் 4819 தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்து பெரும் விபத்தில் சிக்கியது.
பனிமூடிய ஓடுபாதையில் தரையிறங்கியபோது, மிட்சுபிஷி CRJ-900LR ரக விமானம்(Mitsubishi CRJ-900LR) தலைகீழாக கவிழ்ந்தது.
New footage of the plane crash at Toronto airport has appeared online
— NEXTA (@nexta_tv) February 18, 2025
As a result of the plane crash, 18 people were injured. pic.twitter.com/32XxhU7jdG
மினியாபோலிஸிலிருந்து (Minneapolis) புறப்பட்ட இந்த விமானத்தில் பயணித்த 80 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்தின் தன்மை மிகவும் தீவிரமாக இருந்தபோதிலும், விமானத்தில் இருந்த 80 பேரும் சிறிய காயங்களுடன் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இழப்பீடு ஈடு அறிவிப்பு
விமானமானது ஓடுபாதையில் கவிழ்ந்த விபத்தின் விளைவு மிகவும் மோசமாக இருந்திருக்கலாம் என்று விமான நிறுவனம் ஒப்புக்கொண்டது.
மேலும், பயணிகளுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத மோசமான நிகழ்வுக்கு ஈடுகட்டும் விதமாக விமான நிறுவனம் இழப்பீடு தொகையை அறிவித்துள்ளது.
அதன்படி, விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் தலா $30,000 (£23,800) தொகையை டெல்டா ஏர்லைன்ஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த சலுகை எந்த நிபந்தனையும் இன்றி வழங்கப்படுகிறது என்றும், பயணிகளின் சட்ட உரிமைகளை பாதிக்காது என்றும் ஸ்கை நியூஸிடம் ஒரு செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |