கனடாவில் காணாமல் போயுள்ள தமிழ்ப்பெண் மற்றும் தமிழ் இளைஞர்! ஒரே இடத்தில் இருக்கலாம் என கருதும் பொலிசார்
கனடாவில் தமிழப்பெண் மற்றும் தமிழ் இளைஞன் காணாமல் போயுள்ளது தொடர்பில் பொலிசார் பின்னணி தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி North Yorkல் கடந்த 15ஆம் திகதி Yosanth Jegatheeswaran (29) என்பவர் மாயமானார். அவர் கடைசியாக அன்றைய தினம் மதியம் ஜேன் சாலையில் காணப்பட்டிருக்கிறார்.
அதே போல Prasanthy Aruchunan (28) என்ற பெண் கடந்த 16ஆம் திகதி மாலை 7.45 மணியளவில் ஜேன் சாலை மற்றும் பிஞ்ச் அவென்யூ மேற்கில் காணப்பட்டார்.
இருவருமே ஜேன் மற்றும் பிஞ்ச் பகுதியில் இருந்து கடந்த 15ஆம் திகதி ஒன்றாக சென்றுள்ளனர்.
Jegatheeswaran மற்றும் Prasanthyன் பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்டுள்ள பொலிசார் இருவரும் ஒன்றாக இருப்பார்கள் என கருதுகின்றனர்.
5 அடி 11 அங்குலம் உயரம் கொண்ட Jegatheeswaran 93 கிலோ எடை கொண்டவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதே போல 5 அடி 1 அங்குலம் உயரம் கொண்ட Prasanthy 61 கிலோ எடை கொண்டவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இருவர் குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு பொலிசார் கூறியுள்ளனர்.