தனியாக இருந்த பள்ளி மாணவியை தனது காரில் ஏற்றி செல்ல முயன்ற நபர்! கனேடிய பொலிசார் முக்கிய எச்சரிக்கை
கனடாவில் பள்ளி மாணவியை தனது காரில் ஏற்றிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் நபர் குறித்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரொறன்ரோவின் Willowdaleல் தான் இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை நடந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள சென்லாக் சாலையில் இரண்டு பள்ளிக்கூடங்கள் உள்ளது.
அப்போது காரில் ஒரு பெண்ணுடன் நபர் ஒருவர் அங்கு வந்தார். அந்த இடத்தில் நின்றிருந்த 11 வயது சிறுமி அருகே காரை நிறுத்திய ஓட்டுனர் அவருடன் உரையாடலில் ஈடுபட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதன் பின்னர் மாணவியை காருக்குள் ஏறுமாறு கூறியதாக பொலிசார் தெரிவித்தனர். நல்லவேளையாக காருக்குள் சிறுமி ஏறவில்லை என தெரியவந்துள்ளது.
இதே வாரத்தில் இதை போன்றே மற்றொரு சம்பவமும் Danforth and Birchmount பகுதியில் பதிவாகியுள்ளது, இரண்டு சம்பவத்துக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்பது தெரியாத நிலையில் பொலிசார் இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மர்ம நபர் வந்த காரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் யாருக்காவது தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.