கனடாவில் முதன்முறையாக…சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக டொராண்டோ பள்ளி வாரியம் எடுத்துள்ள முடிவு
கனடாவில் முதன்முறையாக சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான வாக்கெடுப்பில் டொராண்டோ பள்ளி வாரியம் வாக்களித்துள்ளது.
சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக வாக்கு
கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவின்(Toronto) பள்ளிகளில் சாதிய ஒடுக்குமுறை நிலவுகிறது என்பதை அங்கீகரித்து அந்த மாவட்ட பள்ளி வாரியம் வாக்களித்து இருப்பதாக குளோப் அண்ட் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
கனடாவில் சாதிய ஒடுக்குமுறை இருப்பதை ஒரு பள்ளி வாரியம் ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறை என்று நம்பப்படுகிறது.
Unsplash
அத்துடன் சாதி பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறைக்கு தீர்வு காணும் வகையில் மாகாண கட்டமைப்பு ஒன்றை உருவாக்க உதவுமாறும் ஒன்ராறியோ மனித உரிமைகள் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்து இருப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
புதன்கிழமை பிற்பகல் நடைபெற்ற வாக்கெடுப்பில், தீர்மானத்திற்கு ஆதரவாக 16 பள்ளி அறங்காவலர்களும், எதிராக 5 பேரும் வாக்களித்து இருந்தனர்.
மேலும் தலித் அல்லது சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள் என்று அடையாளப்படுத்தும் நபர்களின் பணிக்குழுவை உருவாக்கவும் வாரியம் ஒப்புக்கொண்டதாக செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
Photo: @ambedkar_center
தீர்வு
இந்நிலையில் தீர்மானம் குறித்து ரொறன்ரோ மாவட்ட பள்ளி வாரியத்தின் (TDSB) அறங்காவலர் யாளினி ராஜகுலசிங்கம் நாளிதழிடம் தெரிவித்த தகவலில், சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் ஒடுக்குமுறைக் கதைகளைப் பகிர்ந்து கொள்ள முன்வருவதில்லை, ஏனெனில் பிரச்சனைகளை சமாளிக்க அவர்களுக்கு ஆதரவாக எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
ஆனால் தற்போது மனித உரிமைகள் ஆணையத்துடனான வாரியத்தின் கூட்டாண்மை இதற்குப் பரிகாரம் செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.
HT photo