கனடாவில் தீர்க்கப்படாத கொலை வழக்குகள்... ஒரு இலங்கைச் சிறுமிக்கு நிகழ்ந்த துயரம்
கனடாவின் ரொரன்றோ பொலிஸ் துறையால் இதுவரை தீர்க்கப்படாத கொலை வழக்குகளின் எண்ணிக்கை 800.
அவற்றில், ஒரு அப்பாவி இலங்கைச் சிறுமியின் கொலை வழக்கும் ஒன்று!

1999ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 12ஆம் திகதி, ரொரன்றோவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தன் குடும்பத்துடன் வாழ்ந்துவந்த ஷர்மினி ஆனந்தவேல் (15), புதியவேலை ஒன்றில் சேருவதற்காக வீட்டை விட்டுப் புறப்பட்டாள்.
ஆனால், அதற்குப் பிறகு அவள் வீடு திரும்பவேயில்லை!
விலகாத மர்மம்

நான்கு மாதங்களுக்குப் பிறகு, டோன் நதிக்கரையில் அவளது உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
விடயம் என்னவென்றால், இன்று வரை ஷர்மினிக்கு என்ன நடந்தது, அவளைக் கொலை செய்தது யார் என்னும் கேள்விகளுக்கு பதில் கிடைக்கவேயில்லை.

ஷர்மினி வாழ்ந்துவந்த அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்துவந்த ஸ்டான்லி டிப்பெட் (Stanley Tippett, 23) என்னும் நபர் வழக்கில் முக்கிய சந்தேக நபராக சேர்க்கப்பட்டார்.

அவர் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், அது ஷர்மினி கொலை வழக்குக்காக அல்ல, வேறொரு 12 வயது சிறுமியை சீரழித்த வழக்குக்காக!
தன் குடும்பத்தினர் உட்பட பலரிடம், தான் பொலிஸ் துறையில் வேலை பார்ப்பதாக கூறிவந்த டிப்பெட்தான் ஷர்மினிக்கு வேலைக்கு ஏற்பாடு செய்துகொடுத்தது.
ஆனால், அந்த வேலையில் சேருவதற்காக புறப்பட்ட ஷர்மினி, அதற்குப் பின் வீடு திரும்பவேயில்லை.
ஆகவே, டிப்பெட் மீது பொலிசாரின் மொத்த கவனமும் குவிந்தாலும், அவர்தான் ஷர்மினியின் மரணத்துக்குக் காரணம் என்பதற்கான ஆதாரம் எதுவுமே கிடைக்கவில்லை.
ஆக, கனடாவின் ரொரன்றோ பொலிஸ் துறையால் கண்டுபிடிக்கப்படாத கொலை வழக்குகளில் சிறுமி ஷர்மினியின் வழக்கும் ஒன்றாகிவிட்டது.

ஷர்மினி வழக்கை தலைமையேற்று விசாரித்த பொலிஸ் அதிகாரியான மாட் க்ரோன் (Matt Crone) பணி ஓய்வு பெற்றபோது, ஷர்மினி வழக்கை தீர்க்கமுடியாமல் போன்பதற்காக ஷர்மினி குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டாராம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |