கனடாவில் இனவெறியை தூண்டும் வகையில் பள்ளிக்கூடத்துக்கு வந்த ஆசிரியர்! அப்படி என்ன செய்தார் தெரியுமா?
கனடாவில் இனவெறியை தூண்டும் வகையில் முகத்தில் கருப்பு நிற மையை பூசி கொண்டு ஆசிரியர் வந்தது சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ரொறன்ரோவில் உள்ள உயர் நிலை பள்ளியில் தான் இந்த சர்ச்சைக்குரிய விடயம் அரங்கேறியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் Halloween தினம் கொண்டாடப்பட்டது.
இதையடுத்து பல ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விதவிதமான அலங்காரம் செய்து கொண்டு பள்ளிக்கு வந்தார்கள். அந்த வகையில் ஆசிரியர் ஒருவர் முகத்தில் கருப்பு நிற மையை பூசி கொண்டு பள்ளிக்கு வந்தார். இது இனவெறியை தூண்டுவதாக இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதையடுத்து அந்த ஆசிரியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளியின் பிரின்சிபல் Julie Ardell, இந்த நிகழ்வு குறித்து ரொறன்ரோ மாவட்ட பள்ளி வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து Julie Ardell, பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஆசிரியர் செய்த செயல் இனவாத சம்பவம் மற்றும் மனிதாபிமானமற்ற செயல் என குறிப்பிட்டுள்ளார்.
முகத்தில் கருப்பு நிற சாயத்தை பூசிய ஆசிரியர் உடனடியாக முகத்தை கழுவ அறிவுறுத்தப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.