இன்யூட் அடையாள மோசடி வழக்கு: கனேடிய பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனை
கனடாவில் Inuit அடையாள மோசடி வழக்கில் டொரண்டோ பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கனடாவின் நுனாவுட்(Nunavut) நீதிபதி இன்யூட்(Inuit) பூர்வீக குடிமக்கள் அல்லாத டொரண்டோ பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளார்.
கரிமா மஞ்சி(Karima Manji) என்ற அப்பெண், இன்யூட் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்தி $5,000க்கும் அதிகமான மோசடி செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
கரிமா மஞ்சி-வின் இரட்டையர் மகள்கள் இன்யூட் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று போலித் தகவலை அளித்து இரண்டு நிறுவனங்களில் இருந்து சலுகைகளைப் பெற்றதற்காக இந்த தண்டனையை அவர் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அரசு தரப்பு வழக்கறிஞர் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பரிந்துரைத்தார். ஆனால், குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு நீதிபதி கடுமையான தண்டனையை விதித்தார்.
குறிப்பிடத்தக்க வகையில், மஞ்சி குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, அவரது மகள்கள் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |