புதிய பிரதமராக யாருக்கு வாய்ப்பு? விதிகளை வெளியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி
திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கு தேர்தலுக்கான முன்மொழிதல் நடவடிக்கைகள் முடிவடையும்.
தற்போது 100 உறுப்பினர்களுக்கு மேல் ஆதரவைப் பெறும் ஒருவருக்கு பிரதமர் வாய்ப்பளிக்க கட்சி முடிவு
பிரித்தானிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவியை துறந்த நிலையில், நாட்டின் புதிய பிரதமரை தெரிவு செய்யும் விதிகளை அறிவித்துள்ளது கன்சர்வேட்டிவ் கட்சி.
இதன் அடிப்படையில், 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நிரூபிக்கும் நபர் நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்கவிருக்கிறார். திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கு தேர்தலுக்கான முன்மொழிதல் நடவடிக்கைகள் முடிவடையும்.
@getty
அன்றைய தினமே கட்சி உறுப்பினர்களின் வாக்குப்பதிவும் முன்னெடுக்கப்படும். கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 357 என்பதால், 100 உறுப்பினர்கள் ஆதரவு என்ற இலக்கை மூவர் மட்டுமே கடக்க வாய்ப்புள்ளது.
திங்கட்கிழமை மதியத்திற்குமேல் 3.30 மணியில் இருந்து 5.30 மனி வரையில் வாக்கெடுப்பு முன்னெடுக்கப்படும். இதில் இருவர் தெரிவு செய்யப்பட்டு, அதில் அதிக வாக்குகள் பெறும் ஒருவரை 6 மணிக்கு அறிவிக்க உள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல், இறுதியில் பதவியை இழந்த லிஸ் ட்ரஸ் நிலை ஏற்படக்கூடாது என்பதாலையே, தற்போது 100 உறுப்பினர்களுக்கு மேல் ஆதரவைப் பெறும் ஒருவருக்கு பிரதமர் வாய்ப்பளிக்க கட்சி முடிவு செய்துள்ளது.
@PA
அத்துடன் இணைய பக்கத்திலும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்த உள்ளனர். இதில் கன்சர்வேட்டிவ் கட்சியில் இணைந்து குறைந்தது 3 மாதங்கள் பணியாற்றிய ஒருவருக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்கப்படும்.
லிஸ் ட்ரஸ் பிரதமராக தெரிவான போது, பதிவு செய்யப்பட்ட 172,000 கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களில், அவருக்கு ஆதரவாக 81,326 பேர்கள் வாக்களித்தனர்.
இந்த நிலையில், தற்போது எதிர்வரும் திங்கட்கிழமை இரவு அல்லது அடுத்த நாள் பகல், நாட்டின் புதிய பிரதமரை கன்சர்வேட்டிவ் கட்சி அறிவிக்க இருக்கிறது.
இதில் ரிஷி சுனக் அல்லது போரிஸ் ஜோன்சன் நாட்டின் புதிய பிரதமராக தெரிவாகலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.