கையால் தடுப்பதற்கு பதிலாக பந்தை குத்திய கோல் கீப்பர்: செல்சி படுதோல்வி
Chelsea 0-2 Tottenham Hotspur: பிரீமியர் லீக் போட்டியில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பூர் அணியிடம் செல்சி படுதோல்வியடைந்தது.
லண்டனில் நடந்த பிரீமியர் லீக் போட்டியில் செல்சி அணி 0-2 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பூரிடம் தோல்வியுற்றது.
செல்சி கோல் கீப்பர் மைக் பென்டர்ஸ்
லண்டன் ஸ்டாம்ஃபோர்ட் ப்ரிட்ஜ் மைதானத்தில் நடந்த பிரீமியர் லீக் போட்டியில் செல்சி மற்றும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பூர் அணிகள் மோதின. இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதில் முதல் பாதியில் கோல் ஏதும் விழவில்லை.
77வது நிமிடத்தில் கார்னரில் இருந்து வந்த பந்தை, செல்சி கோல் கீப்பர் மைக் பென்டர்ஸ் தடுப்பதற்கு பதிலாக குத்தினார். அதுதவறி சென்று கோல் வலைக்குள் விழ,சுயகோல் என்று அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, செல்சி வீரர் கோல் பால்மர் 80வது நிமிடத்தில் சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார்.
87வது நிமிடத்தில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பூர் வீரர் மேத்யூஸ் கோல் அடித்தார். இறுதியில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பூர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் செல்சியை வீழ்த்தியது.