பிரபல இந்திய திரைப்படம் எடுக்கப்பட்ட சுற்றுலாத்தலத்தை நினைவுகூரும் வெளிநாட்டவர்: வைரல் வீடியோ
சுவிட்சர்லாந்தில், பிரபல இந்தியத் திரைப்படம் ஒன்று படமாக்கப்பட்ட சுற்றுலாத்தலம் ஒன்றை வெளிநாட்டவர் ஒருவர் நினைவுகூரும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

பிரபல இந்திய திரைப்படம் எடுக்கப்பட்ட சுற்றுலாத்தலம்
பிரபல இந்திய நடிகர் ஷாரூக்கான் மற்றும் நடிகை கஜோல் நடித்த Dilwale Dulhania Le Jayenge என்னும் திரைப்படத்தின் பல காட்சிகள் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டன.

அதில், Saanen என்னும் கிராமத்திலுள்ள, ’Palat Palat’ என்னும் பாலம் மிகவும் புகழ் பெற்றது. அந்த திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆன நிலையிலும், இப்போதும் மக்கள் அந்த பாலத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள்.
அது ஒரு இந்திய திரைப்படம் என்பதால், அதை இந்தியர்கள் விரும்புவது சாதாரணமான ஒரு விடயம்தான்.
ஆனால், வெளிநாட்டவர் ஒருவர் அந்த பாலத்துக்குச் சென்று, அதன் அருகே நின்று, இது ஒரு புகழ் பெற்ற இடமாகும், இங்குதான் ஷாரூக்கான் நடித்த Dilwale Dulhania Le Jayenge என்னும் திரைப்படத்தின் பிரபலமான ஒரு காட்சி படமாக்கப்பட்டது என்று கூறும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இதுவரை தயாரிக்கப்பட்ட மிகவும் புகழ்பெற்ற திரைப்படங்களில் அந்த திரைப்படமும் ஒன்று. நீங்கள் எப்போதாவது சுவிட்சர்லாந்துக்கு வந்தால், இந்த பாலத்தை பார்க்கத் தவறாதீர்கள் என்றும் அவர் கூறுகிறார்.
ஆக, வெளிநாட்டவர் ஒருவர் இந்திய திரைப்படம் ஒன்றை நினைவுகூர்ந்து அதை ஆஹாஒஹோவென புகழ, அந்த வீடியோ வைரலாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |