அகதிகளை உற்பத்தி செய்யும் இடம் - Tourist Family movie screening by IBC Tamil
தமிழ்நாட்டிற்கு புலம்பெயரும் இலங்கை தமிழ் குடும்பத்தைப் பற்றி பேசும் கதையாக வெளியாகியிருக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
பார்வையாளர்களைத் தாண்டி திரையுலகினரும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பல காட்சிகள் மனதை தைப்பதாகவும், தான் சந்தித்த பிரச்சனைகள் தன்னுடன் ஒன்றிப்போவதாகவும் இலங்கை தமிழர் ஒருவர் உருக்கத்துடன் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்கள் சந்திக்கும் இன்னல்களை இப்படம் காட்சிப்படுத்தியிருப்பதாகவும் படத்தை பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
குறிப்பாக, இலங்கை அரசியல் விமர்சகரும், நடிகருமான வி.ஐ.எஸ்.ஜெயபாலன், "எங்கள் மீதான அன்பை டூரிஸ்ட் ஃபேமிலி (Tourist Family) திரைப்படம் காட்டியிருப்பதாகவும், உலக வாழ் இலங்கைத் தமிழர்கள் இப்படத்தை பார்க்க வேண்டும்" என்றும் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |