பாரீஸ் ஒலிம்பிக்கால் பிரான்சுக்கு வருவதை தவிர்த்த சுற்றுலாப்பயணிகள்: தற்போதைய நிலவரம்
பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நேரத்தில் அங்கு சுற்றுலா சென்றால், ஹொட்டல்களில் கட்டணம் அதிகமாக இருக்கும் என்பதால் சுற்றுலாப்பயணிகள் பலர் பிரான்ஸ் சுற்றுலாவை தவிர்த்துள்ளனர்.
பாரீஸ் ஒலிம்பிக்கால் பிரான்சுக்கு குறைந்த வருவாய்
ஒலிம்பிக் காரணமாக சுற்றுலாப்பயணிகள் பிரான்சுக்கு சுற்றுலா வருவதை தவிர்த்ததால், தலைநகர் பாரீஸில் ஹொட்டல்களுக்கு நல்ல வருவாய் கிடைத்தாலும், அருங்காட்சியகங்கள், உணவகங்கள் மற்றும் கடைகளுக்கு வருவாய் குறைந்துள்ளது.
பிரபல அருங்காட்சியகமான The Louvre அருங்காட்சியகத்துக்கு 22 சதவிகித வருவாய் குறைந்துள்ளது. விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் இடங்களுக்கு அருகிலுள்ள கடைகளுக்கு நல்ல வருவாய் கிடைத்தாலும், தொலைவில் அமைந்துள்ள கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம் வரவில்லை.
பாரீஸில் வாழ்ந்த பலர் வேறு நாடுகளுக்குச் சென்றுவிட்ட சம்பவங்களும் நிகழ்ந்தன.
Seine நதியில் விளையாட்டுப்போட்டிகள் நடந்தபோது, அந்த பகுதியில் அதிகாரிகள் பொதுமக்கள் போக்குவரத்துக்கு தடைவிதித்ததால், அங்குள்ள கடைகளுக்கும் வருவாய் பாதித்தது.
இந்நிலையில், ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள் முடிவடைந்துள்ளதால், இப்போது மீண்டும் சுற்றுலாப்பயணிகள் பிரான்ஸ் வரத் துவங்கியுள்ளதால், ஒலிம்பிக் போட்டிகளின்போது நலிந்த தொழில்கள் மீண்டும் தற்போது சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |