பிரித்தானியாவின் வெஸ்ட் பே-வில் நிலச்சரிவு: நூலிழையில் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்
பிரித்தானியாவின் டோர்செட் வெஸ்ட் பே கடற்கரை பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்
பிரித்தானியாவின் புகழ்பெற்ற டோர்செட் வெஸ்ட் பே(Dorset West Bay) கடற்கரையில் உள்ள பாறை முகட்டின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது அங்கிருந்த சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சியை வழங்கியுள்ளது.
மேலும் இந்த திடீர் மண் மற்றும் பாறை சரிவில் இருந்து அதிர்ஷ்டவசமாக சுற்றுலா பயணிகள் உயிர் தப்பி ஓடியுள்ளனர்.
Rockfalls and Landslips can happen at anytime. These people had a lucky escape. The South West Coast Path above the cliff at West Bay is currently closed. Thanks to Daniel Knagg for the footage.#Westbay #JurassicCoast pic.twitter.com/38XJjSoBYT
— Dorset Council UK (@DorsetCouncilUK) August 10, 2023
இதற்கிடையில் இந்த நிலச்சரிவின் போது பாறைகள் மற்றும் மண் தொகுப்புகள் கடலில் விழும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிரித்தானிய டோர்செட் கவுன்சில் வெளியிட்ட ட்வீட்
டோர்செட் வெஸ்ட் பே சம்பவத்தை தொடர்ந்து டோர்செட் கவுன்சில் வெளியிட்ட ட்வீட்டில், "பாறை சரிவு மற்றும் நிலச்சரிவுகள் எப்போது வேண்டும் என்றாலும் நடக்கலாம்". "அங்கிருந்த மக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
WEST BAY PHOTOGRAPHY
மேலும் தென் மேற்கு கடற்கரையின் மலை உச்சிக்கு செல்வதற்கான வழி தற்போது அடைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வீடியோவிற்கு கருத்து பதிவிட்டுள்ள நபர் ஒருவர், எனக்கு பிடித்த மகிழ்ச்சியான இடம், இதைப் பார்க்கும் போது என்னுடைய இதயம் உடைகிறது என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |