இரவு முழுவதும் முழுவதும் ஈபிள் கோபுரத்தில் தூங்கிய 2 சுற்றுலா பயணிகள்
பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் டவரில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு இடையே அமெரிக்க சுற்றுலா பயணிகள் இருவர் கோபுரத்தின் உச்சியில் அயர்ந்து தூங்கியுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள் குடிபோதையில், திங்களன்று பாரிஸின் சின்னமான ஈபிள் கோபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்ததது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இருவரும், முந்தைய நாள் இரவு முழுவதும் பாதுகாப்பைக் கடந்து தூக்கியுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு ஈபிள் கோபுரம் பார்வையாளர்களுக்காக திறக்கப்படுவதற்கு முன்பு, அவர்கள் தூங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்புக் காவலர்கள் அவர்களை எழுப்பினர். அவர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் மயக்கத்தில் அங்கேயே படுத்து தூங்கியிருப்பது தெரியவந்தது.
இருவரும் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலைகளுக்கு இடையில் இரவைக் கழித்தனர், இது பொதுவாக பொதுமக்களுக்கு மூடப்பட்ட ஒரு பகுதி. ஆனால் இருவரும் வெளிப்படையாக எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 10:40 மணியளவில் நுழைவுச் சீட்டுக்குச் செலுத்திய பின்னர், இருவரும் கோபுரத்தின் உச்சியில் இருந்து படிக்கட்டுகளில் ஏறும் போது பாதுகாப்புத் தடைகளைத் தாண்டிச் சென்றதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆபத்தான உயரத்தில் இருந்து மக்களை மீட்பதற்கான சிறப்பு பிரிவு உட்பட தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்க அனுப்பப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
விசாரணைக்காக இருவரும் பாரிஸின் ஏழாவது மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் திங்கட்கிழமை காலை ஈபிள் கோபுரம் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படுவதில் ஒரு மணி நேரம் தாமதம் ஆனது.
சமீபத்தில் இரண்டுமுறை ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு விரட்டல் வந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வந்த நாட்களில் சுற்றுலா தளம் பார்வையாளர்களுக்கு அனுமதியின்றி தற்காலிகமாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |