இத்தாலியர்களின் படகு மீது மோதிவிட்டு உதவி செய்யாமல் தப்பிய ஜேர்மானியர்கள்... ஒரு கோர சம்பவம்
இத்தாலிக்கு சுற்றுலா சென்ற இரண்டு ஜேர்மானியர்களின் இயந்திர படகு ஒன்று, சிறிய படகு ஒன்றின்மீது மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் சிக்கியவர்களில் Umberto Garzarella (37) என்ற ஆண், வயிற்றில் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.
படகில் இறந்து கிடந்த Umbertoவின் உடல் அருகே, ஒரு பெண்ணின் உடைகளும் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பொலிசார் ஏரிக்குள் மூழ்கி தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது ஒருகால் கிட்டத்தட்ட தனியாக வந்த நிலையில், ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அது Umbertoவுடன் பயணித்த Greta Nedrotti (25) என்ற பெண் என்பது தெரியவந்தது.
விபத்தை ஏற்படுத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிவிட்ட நிலையில், அவர்களது படகு சேதமடைந்திருந்ததை வைத்தே, அது விபத்தை ஏற்படுத்தியவர்களின் படகு என்று மக்கள் கண்டுபிடித்ததால் பொலிசாரிடம் அவர்கள் சிக்கினார்கள்.
அவர்கள் மீது கொலை மற்றும், விபத்து ஏற்படுத்தியது குறித்து தெரிவிக்காமல் இருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.