சுவிட்சர்லாந்தில் 9,700 அடி உயரத்தில் கேபிள் காரில் சிக்கிக்கொண்ட சுற்றுலாப்பயணிகள்
தென்மேற்கு சுவிட்சர்லாந்தில், 9,700 அடி உயரத்தில் சுற்றுலாப்பயணிகள் கேபிள் காரில் சிக்கிக்கொண்ட சம்பவம் ஒன்று நடைபெற்றது.
9,700 அடி உயரத்தில் சிக்கிக்கொண்ட சுற்றுலாப்பயணிகள்
நேற்று காலை, சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் கேபிள் கார் ஒன்றில் சுற்றுலாப்பயணிகள் சுமார் 300 பேர் பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணம் தடைபட்டது.
சுற்றுலாப்பயணிகள் 9,700 அடி உயரத்தில் பயணிக்கும்போது இந்த பிரச்சினை ஏற்பட்டாலும், யாரும் பயப்படவேண்டாம், கேபிள் காரில் அமர்ந்தவண்ணம் இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசியுங்கள்.
அதற்குள் கோளாறை சரி செய்துவிடுவோம் என தொழில்நுட்பப் பிரிவு அலுவலர்கள் கூறியுள்ளனர்.
சுற்றுலாப்பயணிகளுக்கு சிற்றுண்டி முதல் உணவு வரை வழங்கப்பட்டுள்ளது.
முடிவுக்கு வராத பிரச்சினை
ஆனால், மதியம் 1.00 மணி ஆன நிலையிலும் கோளாறு சரி செய்யப்படாததால், சுற்றுலாப்பயணிகள் chairlift என்னும் லிஃப்ட் மூலம் தரையிறக்கப்பட்டனர்.
அங்கிருந்து அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் தாங்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர்.