10 டன் எடை கொண்ட டவரை காணவில்லை.., விநோத புகாரால் பொலிஸார் அதிர்ச்சி
இந்திய மாநிலமான பீகாரில், 10 டன் எடை கொண்ட மொபைல் டவர் காணாமல் போனதாக புகார் வந்ததால் பொலிஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டவரை காணவில்லை
பீகார் மாநிலம், கொசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் டெக்னீஷியன் ராஜேஷ்முமார் யாதவ். இவர், சந்தீபன் காட் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகாரில், "தான் பணிபுரியும் நிறுவனத்திற்கு சொந்தமான 50 மீட்டர் உயரமுள்ள 10 டன் எடை கொண்ட மொபைல் டவர் உஜ்ஜைனி கிராமத்தில் உள்ள உபித் உல்லா என்ற விவசாயியின் வயலில் நிறுவப்பட்டிருந்தது.
தற்போது, வயலில் இருந்த மின் உபகரணங்கள் மற்றும் மொபைல் டவர் பகுதிகள் அனைத்தும் காணாமல் போயுள்ளன. அதனுடைய மொத்த மதிப்பு மட்டும் ரூ. 8.5 லட்சம்" என்று கூறியிருந்தார்.
பொலிஸார் விசாரணை
அவர் அளித்த புகாரை ஏற்றுக்கொண்ட பொலிஸார், டவர் காணாமல் போன இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு, ஜனவரியில் நிறுவப்பட்டிருந்த மொபைல் டவரானது மார்ச் மாதத்தில் காணாமல் போயுள்ளது.
இந்த திருட்டு நடைபெற்று 8 மாதங்கள் ஆன நிலையில் தற்போது புகார் வந்திருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது. இருப்பினும், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |