இலங்கைக்கு எதிராக சிக்ஸர் மழைபொழிந்தும் முதல் சதத்தை தவறவிட்ட வீரர்
இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 287 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஹசரங்கா
வங்கதேச அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது. அணித்தலைவர் ஷாண்டோ 40 ஓட்டங்களிலும், சவுமியா சர்க்கார் 68 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அணியின் ஸ்கோர் 130 ஆக இருந்தபோது, இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்காவின் தாக்குதல் ஆரம்பித்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் டௌஹித் ஹிரிடோய் இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார்.
— CricTracker (@Cricketracker) March 15, 2024
மிரட்டலாக அரைசதம் விளாசிய அவர் சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதன்மூலம் வங்கதேச அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது.
50 ஓவர்கள் முழுமையாக ஆடிய வங்கதேசம், 7 விக்கெட் இழப்பிற்கு 286 ஓட்டங்கள் குவித்தது.
Dutch-Bangla Bank Bangladesh 🆚 Sri Lanka ODI Series 2024 | 2nd ODI 🏏
— Bangladesh Cricket (@BCBtigers) March 15, 2024
Innings Break | Sri Lanka Need 287 Runs to Win
Details 👉: https://t.co/8QnMRSHAtg#BCB #Cricket #BANvSL #BDCricket #LiveCrcket #Bangladesh #HomeSeries #odiseries pic.twitter.com/s622mnTrne
டௌஹித் ஹிரிடோய்
டௌஹித் ஹிரிடோய் ஆட்டமிழக்காமல் 102 பந்துகளில் 96 ஓட்டங்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடங்கும்.
ஒருநாள் போட்டியில் 7வது அரைசதம் விளாசிய ஹிரிடோய், 4 ஓட்டங்களில் தனது முதல் சதத்தினை தவறவிட்டார்.
இலங்கையின் தரப்பில் வணிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளும், தில்ஷன் மதுஷன்கா 2 விக்கெட்டுகளும், பிரமோத் மதுஷன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
Bangladesh set 286/7. Great knock by Hridoy (96*). Wanindu with 4 wickets!
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) March 15, 2024
It's time for our batsmen to chase this down! 👊#BANvSL pic.twitter.com/SGeta5G728
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |