முதல் சதத்தையே இரட்டைசதமாக மாற்றிய வங்காளதேச வீரர்! திணறும் மே.தீவுகள்
Towid hridoy maiden double century: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்டில் தவ்ஹித் ஹிரிடோய் இரட்டைசதம் அடித்தார்.
சில்ஹெட்டில் நடந்து வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், வங்காளதேசத்தின் தவ்ஹித் ஹிரிடோய் தனது முதல் இரட்டைசதத்தினை பதிவு செய்தார்.
மேற்கிந்திய தீவுகள் 356 ஓட்டங்கள்
வங்காளதேசம் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் சில்ஹெட்டில் நடந்து வருகிறது.
மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 356 ஓட்டங்கள் குவிக்க, வங்காளதேச அணி 356 ஓட்டங்களை கடந்து துடுப்பாட்டம் செய்து வருகிறது.
துடுப்பாட்ட வீரர் தவ்ஹித் ஹிரிடோய் (Towhid Hridoy) இப்போட்டியில் முதல் டெஸ்ட் சதம் அடித்தார்.
இரட்டை சதம்
சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் 154 ஓட்டங்களில் இருந்தபோது, சீல்ஸ் வீசிய பந்து அவரை பலமாக தாக்கியது.
எனினும், தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தவ்ஹித் ஹிரிடோய் இரட்டை சதம் அடித்தார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையே இரட்டைசதமாக மாற்றிய முதல் வங்காளதேச வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
