ஜேர்மன் தொழிற்சாலையில் நச்சு வாயுக் கசிவு: பலர் மருத்துவமனையில் அனுமதி...

Germany
By Balamanuvelan Jan 13, 2024 09:07 AM GMT
Report

ரசாயனங்களை சேமித்துவைத்தல், வெடிபொருட்களை சேமித்து வைப்பதுபோலவே அச்சத்திற்குரிய விடயமாக மாறிவருகிறது.

அதிகம் வெளியே தெரியாத ஆபத்து

இந்தியாவின் போபால் நகரில், யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவுப் பேரழிவால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்த விடயம் நினைவிருக்கலாம்.

ஜேர்மன் தொழிற்சாலையில் நச்சு வாயுக் கசிவு: பலர் மருத்துவமனையில் அனுமதி... | Toxic Gas Leak At German Factory

Image: Südkurier/Jörg-Peter Rau/dpa/picture alliance

உலகின் முன்னேற்றத்துக்கு தொழிற்சாலைகள் அவசியம் என்றாலும், அவற்றால் ஆபத்துக்கள் உள்ளதையும் மறுப்பதற்கில்லை. விடயம் என்னவென்றால், பல நாடுகளில் மக்கள் பயணிக்கும், பயன்படுத்தும் ரயில் நிலையங்களுக்கு அருகிளேயே இத்தகைய ரசாயன சேமிப்பகங்கள் உள்ளதை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே அப்படி ஒரு ரசாயன சேமிப்பகம் இருப்பதே கவனத்துக்கு வருகிறது என்பது கவலைக்குரிய விடயம்தான்.

ஜேர்மன் தொழிற்சாலையில் நச்சு வாயுக் கசிவு

நேற்று, தெற்கு ஜேர்மனியிலுள்ள Konstanz நகரில் அமைந்துள்ள ரசாயன ஆலை ஒன்றில், ரசாயனம் ஒன்று சேமித்துவைக்கப்பட்டிருந்த தொட்டியில், திடீரென நச்சு வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது.

அதனால் தொழிற்சாலைக்குள் அந்த நச்சு வாயு பரவத் துவங்க, அதை சுவாசித்த தொழிலாளர்களுக்கு சுவாசப் பிராசினைகள் ஏற்பட்டுள்ளன. உடனடியாக 25 தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட, அவர்களில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஜேர்மன் தொழிற்சாலையில் நச்சு வாயுக் கசிவு: பலர் மருத்துவமனையில் அனுமதி... | Toxic Gas Leak At German Factory

Image: Silas Stein/dpa/picture alliance

சமயோகிதமாக துணிந்து செயல்பட்ட பணியாளர்

வாயுக் கசிவு ஏற்பட்டதும், ஒரு பணியாளர் உடனடியாக பாதுகாப்பு உடை அணிந்துகொண்டு அந்த ரசாயனத் தொட்டியை forklift என்னும் சிறிய ட்ரக் மூலம் வெளியே கொண்டு சென்று, மக்கள் நடமாட்டம் இல்லாத திறந்தவெளியில் வைத்துவந்துள்ளார்.

துணிச்சலுடனும், சமயோகிதமாகவும் செயல்பட்டு அபாயத்தை கணிசமான அளவில் குறைத்த அந்த பணியாளருக்கு தீயணைப்புத்துறையினர் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

நடந்தது என்னவென்றால், திடீரென வெப்பநிலை உயர்ந்ததால், அந்த தொட்டியில் சேமிக்கப்பட்டிருந்த ரசாயனக் கலவையிலிருந்த இரண்டு ரசாயனங்கள், பயங்கர வேதிவினையில் ஈடுபட, அதனால் நச்சுவாயு உருவாகி கசியத் துவங்கியுள்ளது.

அந்த பணியாளர் உடனடியாக அந்த ரசாயனத் தொட்டியை அங்கிருந்து அகற்றாவிட்டால் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US