9-ஆம் தலைமுறை Camry காரை வெளியிட்டுள்ள Toyota., விலை என்ன தெரியுமா?
Toyota நிறுவனம் அதன் 9-ஆம் தலைமுறை Camry காரை வெளியிட்டுள்ளது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (Toyota Kirloskar Motor) தனது பிரபலமான செடான் Toyota Camry-யின் Facelift பதிப்பை டிசம்பர் 11-ஆம் திகதி அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய தலைமுறை டொயோட்டா கேம்ரி ஒற்றை வேரியண்டில் (single feature-loaded variant) வழங்கப்படுகிறது.
இதன் அறிமுக விலை இந்தியாவில் ரூ.48 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) ஆகும்.
முந்தைய டொயோட்டா கேம்ரி காரின் எக்ஸ்ஷோரூம் விலையை விட இந்த கார் ரூ.1.83 லட்சம் கூடுதல் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் ஓன்லைனில் அல்லது தங்கள் அருகிலுள்ள டீலர்ஷிப்பிற்குச் சென்று இந்த காரை முன்பதிவு செய்யலாம். அதன் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
டொயோட்டா கேம்ரி இந்தியாவில் Skoda Superb-உடன் நேரடியாக போட்டியிடுகிறது. கேம்ரி Completely Knocked Down (CKD) route வழியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படும்.
புதிய டிசைன், புதிய interior layout, புதிய comfort அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட powertrain மற்றும் advanced driving assist system (ADAS) பாதுகாப்பு அம்சங்களுடன் கேம்ரியின் ஒன்பதாவது தலைமுறை மாடல் இதுவாகும்.
இந்த கார் next-generation hybrid system-ஐ பெறுகிறது, இது லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் கூறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Toyota Kirloskar Motor, 2024 Toyota Camry, 9th-gen Toyota Camry, Toyota Camry price