தானியங்கி வாகன சேவையை இடைநிறுத்திய டொயோட்டா நிறுவனம்? காரணம் என்ன?
உலகின் முதனிலை வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா நிறுவனம் தானியங்கி வாகனங்களை அறிமுகம் செய்திருந்தது.
ஆங்கில திரைப்படங்களில் நாங்கள் பார்த்திருப்பது போன்று இந்த வாகனங்கள் காணப்படும் என்றால் அது மிகையாகாது.
இந்த வாகனங்களுக்கு டொயோட்டா நிறுவனம் e-Palette என பெயரிட்டிருந்தது.
ஒலிம்பிக் போட்டிகளின் போது விளையாட்டு வீர வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டி நடுவர்கள் அதிகாரிகள் என்போர் இந்த அதி நவீன ஓட்டுனர் இல்லா தானியங்கி வாகனம் பயன்படுத்தியிருந்தனர்.
எனினும் தற்பொழுது நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் கட்புலனற்ற ஓர் வீர்ரின் மீது இந்த வாகனம் மோதுண்டதனால் இந்த வாகன சேவையை டொயோட்டா நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது.
தானியங்கி வாகனம் மோதுண்டதில் விளையாட்டு வீர்ர் ஒருவர் சிறு காயமடைந்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும்,இந்த வகை e-Palette களோ அல்லது டொயோட்டாவின் தானியங்கி வாகனங்ளோ இன்னமும் வீதியில் பயணம் செய்யக்கூடிய தொழில்நுட்ப தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.