3 லட்சம் மதிப்புள்ள தேக்கு மரக் கட்டைகள்: முல்லைத் தீவில் இருந்து யாழிற்கு கடத்தல்
முல்லைத் தீவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட தேக்கு மரக்கட்டைகளை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடத்தப்பட்ட தேக்கு மரக் கட்டைகள்
இலங்கையின் முல்லைத் தீவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வாகனத்தில் தந்திரமான முறையில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட தேக்கு மரக்கட்டைகளை யாழ் சாவகச்சேரி பொலிஸார் மடக்கி பிடித்து கைப்பற்றியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை (18.08.2023)ஆம் திகதி மதியம் 2:30 மணியளவில் தேக்கு மரக்கட்டைகளை சாவகச்சேரி நகர பகுதியில் வைத்து அப்பகுதி பொலிஸார் மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸார் வெளியிட்ட தகவலில், தேக்கு மரக் கட்டைகள் ஒல்லித் தேங்காய் குவியலுக்குள் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட போது கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர்.
3 லட்சம் மதிப்புள்ள கட்டை
இந்நிலையில் தேக்கு மரக் கட்டைகளை கடத்தி வாகனத்தை ஓட்டி வந்த மூல்லைத் தீவை சேர்ந்த 33 வயதான சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் கடத்தப்பட்ட 13 தேக்கு மரக் கட்டைகள் சுமார் 3 லட்சம் மதிப்பு கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். அதே சமயம் கைது செய்யப்பட்ட சாரதியை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் நடவடிக்கையையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |