ப்ரென்னர் கணவாயில் பொதுமக்கள் போராட்டம்: சீரான போக்குவரத்து நெரிசல்
ப்ரென்னர் பாஸ்(Brenner Pass) கணவாய் பகுதியில் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்கு வந்து இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் போராட்டம்
அஸ்திரியாவையும், இத்தாலியையும் இணைக்கும் மிக முக்கியமான வழித்தடமான ப்ரென்னர் கணவாயில் அதிகமான கனரக வாகனங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் இரைச்சல் போன்ற காரணங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கண்டித்து சனிக்கிழமை ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் விளைவாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று ஏற்கனவே அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர்.

போராட்டம் நடைபெற்ற சிறிது நேரத்திலேயே கிட்டத்தட்ட 219 லாரிகள் அப்பகுதியை விட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், போராட்டத்தினால் ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்பட்டு சீரான போக்குவரத்து மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த சாலைகளை பராமரிக்கும் ஆஸ்பினாக் நிறுவனம், அப்பகுதியில் உள்ள அனைத்து வழித்தடங்களையும் திறந்து விடப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |