இளம்பெண்களை பிரித்தானியாவுக்குள் கடத்தும் கடத்தல் கும்பல்கள்: எதற்காக தெரியுமா?
பிரித்தானியாவில் சில கடத்தல் கும்பல்கள், இளம்பெண்களையும் சிறுமிகளையும் பிரித்தானியாவுக்குள் கடத்துகின்றனவாம்.
அந்த பெண்கள் அனைவருமே ஒரே ஒரு காரணத்துக்காகவே கடத்தப்பட்டு பிரித்தானியாவுக்குள் கொண்டுவரப்படுகிறார்கள்.
எதற்காக தெரியுமா?
ஸ்கொட்லாந்திலுள்ள நிறுவனம் ஒன்று, 154 பேர் கொண்ட திருட்டுக் கும்பல் ஒன்றை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த கும்பலிலுள்ள இளம்பெண்களும் சிறுமிகளும், கடைகளுக்கு பொருட்கள் வாங்குவதுபோலச் சென்று, விலையுயர்ந்த பொருட்களை திருடிவருவார்கள்.
GETTY IMAGES
அவர்களை இயக்கும் கும்பல், அந்த பொருட்களை விற்பனை செய்யும் அல்லது வெளிநாடுகளுக்கு அனுப்பிவிடும். இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் லண்டன், பர்மிங்காம், மான்செஸ்டர் மற்றும் டார்லிங்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், இதேபோல, 56 திருட்டுக் கும்பல்கள் இயங்குவதாக, இந்த கும்பல்களுக்கெதிராக செயல்படும் அமைப்பான Retailers Against Crime (RAC) என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.
எதனால் இளம்பெண்கள்?
பொதுவாக கடைக்கு வரும் இளம்பெண்களை யாரும் சந்தேகத்துடன் பார்ப்பதில்லை என்பதால், பல நாடுகளைச் சேர்ந்த எளிதில் பாதிக்கப்படும் அபாயத்திலிருக்கும் இளம்பெண்களையும் சிறுமிகளையும் இந்த கடத்தல் கும்பல்கள் கடத்தி பிரித்தானியாவுக்குள் கொண்டு வருகிறார்கள்.
இந்த இளம்பெண்கள் சிறுமிகள் மூலமாக, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 953 மில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாம்.
GETTY IMAGES
விடயம் என்னவென்றால், இவ்வளவு திருடியும், அந்த இளம்பெண்கள், சிறுமிகளின் நிலை மோசமாகத்தான் உள்ளதாம். அவர்கள், ஒரே அறையில் 30 முதல் 40 பேர் வரை நெருக்கடியான சூழலில் அழுக்கு அறைகளில், பாயில் படுத்து உறங்கிக் கொண்டிருக்க, அவர்களைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் கும்பல்களோ, நல்ல பணம் பார்க்கின்றனவாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |