புடவையில் கட்டப்பட்ட ஊஞ்சலில் விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்
தமிழக மாவட்டம், சென்னையில் புடவையில் கட்டப்பட்ட ஊஞ்சலில் விளையாடிய சிறுவன் கழுத்து இறுகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புடவையில் ஊஞ்சல்
சென்னை, கண்ணகி நகர், 2 அடுக்கு, 54 -வது குறுக்கு தெருவைச் சேர்ந்த தம்பதியினர் வேலாயுதம் மற்றும் மகாலட்சுமி. இவர்களின் இளைய மகன் செல்வா (12) தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவரது வீட்டில், குழந்தைகளை உறங்க வைப்பதற்காக புடவையில் ஊஞ்சலை கட்டியுள்ளனர்.
சிறுவன் உயிரிழப்பு
இந்நிலையில், செல்வாவின் தந்தை கண்ணில் மருந்து போட்டு விட்டு படுத்துக் கொண்டிருந்தார். அப்போது,தனது மூத்த மகனை அனுப்புவதற்காக மகாலட்சுமி வெளியில் சென்றிருந்தார்.
அந்த சமயத்தில், இளைய மகன் செல்வா ஊஞ்சலில் அமர்ந்து சுற்றி சுற்றி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக புடவை கழுத்தில் சிக்கியாதல் செல்வா சுயநினைவை இழந்துள்ளார்.
இதனை பார்த்த, அவரது உறவினர்கள் மயக்க நிலையில் இருந்த செல்வாவை மீட்டு உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், செல்வா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தகவலறிந்து வந்த கண்ணகி நகர் பொலிசார், செல்வாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |