காலில் பட்ட விஷச் செடியால் பிரித்தானியருக்கு நேர்ந்த துயரம்: ஒரு எச்சரிக்கை செய்தி
லண்டனிலுள்ள பூங்கா ஒன்றில், செடி ஒன்று தன் காலில் பட்டதால், காலில் பெரிய கொப்புளம் ஏற்பட்டு அவதியுற்றுவருகிறார் இளைஞர் ஒருவர்.
காலில் பட்ட செடியால் நேர்ந்த துயரம்
மேற்கு லண்டனில் உள்ள பூங்கா ஒன்றிற்கு தன் தம்பியுடன் சென்றிருந்தார் டேனியல் (Daniel Logan, 21). தம்பி விளையாடிக்கொண்டிருந்த பந்து ஒரு புதருக்குள் சென்று விழவே, அதை எடுப்பதற்காக அவர் சென்றபோது, அவரது கணுக்காலில் ஒரு செடி உரசியுள்ளது.
சிறிது நேரத்தில் டேனியலின் காலில் பெரிய கொப்புளம் உருவாகி அந்த இடமே சிவந்துபோனது.
எச்சரிக்கை
தான் 21 வயது இளைஞன் என்பதாலும், அந்த செடி தன் காலில் பட்டதால் தனக்கு பெரிய பிரச்சினை இல்லை என்றும் கூறும் டேனியல், இதுவே ஒரு குழந்தை விளையாடும்போது தடுக்கி அந்த செடிக்கு மேல் விழுந்திருந்தால், அதன் முகத்தில் இந்த செடி பட்டிருந்தால், வாழ்நாளுக்கும் அது வடுவாகியிருக்கும் என்கிறார்.
அந்த இடத்தில், இப்படி விஷச் செடிகள் உள்ளன என போர்டு வைத்திருந்தால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கக்கூடும் என்கிறார் அவர்.
டேனியலில் காலில் கொப்புளத்தை ஏற்படுத்திய அந்தச் செடியின் பெயர் Heracleum mantegazzianum ஆகும் அது, giant hogweed என்றும் அழைக்கப்படுகிறது.
நம் நாட்டிலேயே மக்கள் இந்த ஒரு செடியிடம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று கூறுவேன் என்கிறார் தாவரவியல் நிபுணரான Dr Mark Spencer என்பவர். அவ்வளவு மோசமான நச்சுச் செடியாம் அது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |