திருமணமான ஒரே வாரத்தில் குடும்பத்துடன் பலியான தம்பதி!
இந்திய மாநிலம் ஆந்திராவில் கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
புதுமணத்தம்பதி
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் பாலகிரண். இவரும் காவ்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 29ஆம் திகதி திருமணம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன்னர் ஷமீர்பேட்டையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது.
இந்த நிலையில் பாலகிரண் தனது மனைவி, தந்தை ரவீந்திரா, தாய் லட்சுமி மற்றும் சகோதரன் ஆகியோருடன் திருப்பதிக்கு காரில் சென்றுள்ளனர்.
அதன் பின்னர் நேற்று இரவு அவர்கள் ஊருக்கு திரும்பியபோது, நல்லகரா எனும் கிராமத்தில் முன்னால் சென்ற லொறி மீது பாலகிரண் குடும்பம் பயணித்த கார் பயங்கரமாக மோதியுள்ளது.
பிரேத பரிசோதனை
இதில் கார் நொறுங்கியதில் சம்பவ இடத்திலேயே அதில் பயணித்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பனிமூட்டம் காரணமாக முன்னால் சென்ற வாகனம் தெரியாததால் விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. புதுமணத்தம்பதி திருமணமான ஒரே வாரத்தில் குடும்பத்துடன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |