திருமணமாகி ஒரு ஆண்டே ஆன நிலையில் கனடா சென்ற இந்திய இளைஞர்: வீட்டாருக்கு கிடைத்துள்ள துயரச் செய்தி
பொருளாதார ரீதியில் சற்று முன்னேறலாம் என்னும் ஆசையில் வெளிநாட்டுக்கு புலம்பெயரும் இந்தியர்கள், குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தொடர்ந்து மாரடைப்பு, விபத்து போன்ற அசம்பாவிதங்களால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது, கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
கனடாவில் நிகழ்ந்த துயர சம்பவம்
இந்தியாவின் பஞ்சாபிலுள்ள Kapurthala என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த சுக்தேவ் ஷர்மா (Sukhdev Sharma, alias Sukha Thigli, 28) என்னும் இளைஞருக்கு, கடந்த ஆண்டுதான் திருமணம் ஆகியுள்ளது.
மனைவியைப் பிரிந்து ஷர்மா கனடா சென்ற நிலையில், திடீரென அவர் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைக்கவே, அவர்கள் கவலையிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளார்கள்.
அமெரிக்காவிலும் ஒரு சோக நிகழ்வு
பஞ்சாபைச் சேர்ந்த மணி சரண் என்பவர் அமெரிக்கா சென்றிருந்த நிலையில், அவர் விபத்தில் உயிரிழந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து அவரது குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
மொத்தத்தில், பஞ்சாபிலிருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த இளைஞர்கள் தொடர்ந்து மாரடைப்பு, விபத்து போன்ற அசம்பாவிதங்களால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது, பஞ்சாப் மக்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |