வீட்டில் சிக்கன் சாப்பிட்ட பின்பு 4 வயது மகளுக்கும், தந்தைக்கும் நேர்ந்த சோகம்
தமிழக மாவட்டம் மதுரையில், வீட்டில் சிக்கன் சமைத்து சாப்பிட்ட 4 வயது மகளும், தந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கன் சாப்பிட்ட மகள்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெரியபொக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் ஆனந்த் (33) மற்றும் பவித்ரா. இவர்களுக்கு, மிதுஸ்ரீ என்ற 4 வயது பெண் குழந்தை இருந்தது.
இவர்கள் இருவரும் கோழிப்பண்ணை அமைப்பதற்கு முடிவெடுத்து அதற்கான பணிகளை செய்ய ஆயத்தமாகி வந்தனர். இந்நிலையில், வீட்டில் சமைத்த சிக்கனை தந்தை கௌதம் ஆனந்த் மற்றும், மகள் மிதுஸ்ரீ ஆகிய இருவரும் சாப்பிட்டுள்ளனர்.
உயிரிழப்பு
இதை சாப்பிட்ட சிறுமிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்பு, அவரை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கும் சரிவராததால் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இதன் பிறகு, மகள் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த கௌதம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்து, பவித்ரா பொலிசில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் அவர், தனது கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், குடித்துவிட்டு அதிக மாமிசம் சாப்பிட்டார் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், கௌதம் மற்றும் மிதுஸ்ரீ ஆகிய இருவரின் உடல்களும் உடற்கூறாய்வு செய்யப்பட்ட பின்னரே, இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்று பொலிசார் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |