ஒன்லைன் மூலம் ஆர்டர் செய்து ஷவர்மா சாப்பிட்ட இளைஞருக்கு நேர்ந்த சோகம்
இந்திய மாநிலம் கேரளாவில் ஒன்லைன் மூலம் ஆர்டர் செய்து ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்லைனில் சவர்மா ஆர்டர்
கேரளாவில் உள்ள கோட்டயத்தைச் சேர்ந்தவர் ராகுல் டி.நாயர் (24). இவர், கொச்சி காக்கநாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவர் கடந்த 18 -ம் திகதி ஒன்லைன் மூலம் காக்கநாட்டிலுள்ள ஓட்டல் ஒன்றில் சவர்மா மற்றும் மயோனைஸை ஆர்டர் செய்துள்ளார்.
பின்பு, உணவு பொருள்கள் டெலிவரி ஆனதும் அதனை வாங்கி சாப்பிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, ராகுலுக்கு சற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இளைஞர் மரணம்
இதனையடுத்து, கடந்த 19 -ம் திகதி மருத்துவமனைக்கு சென்று மருந்து வாங்கி உட்கொண்டுள்ளார். ஆனால், இவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார். இதில், சவர்மா சாப்பிட்டு புட்பாய்சன் ஏற்பட்டு ராகுல் நாயர் உயிரிழந்துள்ளார் எனக் கூறப்படுவதால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், காக்கநாடு லே ஹையாத் என்ற ஓட்டலிலிருந்து வாங்கிய சாப்பிட்ட பின்பு தான் இளைஞருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது என அவரது உறவினர்கள் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் படி, அதிகாரிகள் மற்றும் பொலிசார் உணவுக்கடைக்கு சென்று விசாரணை நடத்தி ஓட்டலுக்கு சீல் வைத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |